இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்


இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்

குடும்ப தகராறு காரணமாக கணவனால் அவரது மனைவி பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் பன்னல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெல்பல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதலில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) இடம்பெறவுள்ளது.

சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பன்னல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடவத்தை மங்கட வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மங்கடபார வயல் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலையினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.