ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை

ஐநா மனித உரிமை

ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 24ஆம் திகதி புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் முதற்தடவையாக காணொளி ஊடாக இடம்பெறுகிறது.

பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்.


இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித

உரிமைகள் சபையின் புதிய தீர்மானமொன்றை போரம் ஏஷியா, சி.ஜே.ஏ, சி.பி.ஏ, சி.பி.ஜே, எச்.ஆர்.டபிள்யூ, பேர்ள் உள்ளிட்ட அமைப்புகள் கோரியுள்ளன.

பாதிக்கப்பட்ட நபர்கள் மீது குறிப்பிட்டதொரு கவனத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் நீதியைப் பாதுகாப்பதற்காக,

சர்வதேச உறுதிப்பாடொன்றுக்காக, மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் பலமான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு,

மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளிடையே தாங்கள் வலியுறுத்துவதாக குறித்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Home » முக்கிய செய்திகள் » ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை
Spread the love