இலங்கை தொடர்பாக இன்று வெளியாகும் ஐநாவின் அறிவிப்பு – பீதியில் இலங்கை

Spread the love

இலங்கை தொடர்பாக இன்று வெளியாகும் ஐநாவின் அறிவிப்பு – பீதியில் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பெச்லெட் இன்று (27) இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின் போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தமது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு பதில் வழங்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன்

நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40/1 ஆகிய பிரேரணையிலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மேற்கண்ட தீர்மானங்கள் இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணாணவை என அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அனுமதி இன்றி வழங்கப்பட்ட இணை அனுசரனையின் மூலம் கடந்த அரசாங்கம்

வெளிப்படையாக ஜனநாயக விழுமியங்களை மீறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கை தொடர்பாக

Spread the love