இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
இலங்கையில் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இன்று கொரோனாவினால் ஒருவர் பலி என உறுதிசெய்துள்ளது.
மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும்
தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்ட விமானங்கள்

- 30000 வர்த்தக நிலையங்கள் VAT வரிக்குள்

- உயர்தர உயிரியல் மாணவி திடீர் மரணம்

- பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயம்

- இலங்கையில் பிராந்திய புகைமூட்டம்











