வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு

இதனை SHARE பண்ணுங்க

வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு

பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இராணுவ ட்ரக் வண்டியில் இரண்டு இராணுவத்தினர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், ட்ரக் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply