
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி ,யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாள்தோறும் வெளியாகவும் இலங்கை செய்திகளில் வாகன விபத்துக்கள் தலைப்பு செய்திகளாக வலம் வருகின்றன .
இலங்கையில் விபத்துக்கள் அதிகம் என்பதே இலங்கை தலைப்பு செய்திகள் ,மூலம் இலங்கை நாடு ஆபத்தான நாடக உள்ளதை இவை எடுத்து காட்டுகின்றன .
இந்த அவல நிலை மாற்றம் பெற்று இலங்கை வீதி போக்குவரத்திற்கு சிறந்த நாடக என்று மாற்றம் பெறும் என்பதே நமது மக்கள் வேண்டுதலாக உள்ளது .