இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு


இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு

கொஹுவல, பேலிய​கொட, வெதமுல்ல ஆகிய STF முகாம்களிலுள்ள 9 பேருக்கு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறித்த மூன்று STF முகாம்களும் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலிய​கொடையில் இருந்து மீன்

கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன்மூலமே கொரோனா தொற்று

முகாம்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிரிஹான மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில்

கடமையாற்றும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.