இரண்டாய் சிதறும் இலங்கை …!
கால் நடந்த சாலை எல்லாம்
கசங்கிய உடல்கள் …
காதோரம் கேட்கிறது
கதறல் குரல்கள் …..
கொன்றவனும் வந்து விட்டான்
கொடும் ஆட்சியிலே ஏறிவிட்டான் ..
நிம்மதியை இழந்து விட்டோம்
நிர்கதியாகி விட்டோம் ….
ஆண்டுகளாய் ஆண்டு நின்றார்
ஆறாத வலிகள் தந்தார் …
என் தவறு செய்து நின்றோம் ..?
ஏனிந்த வலிகள் தந்தார் …?
உன் போல வாழ்வொன்றை
உரிமையோடு தந்து விட்டால் …
ஒன்று பட்டு வாழ்ந்திடவே
ஒருபோதும் மறுத்ததில்லை …
சிங்கள நாடென்றால்
சிதறுமடா நாடு இரண்டு …
வருங்காலம் பகிருமடா – சிங்களம்
வலியோடு ஓடுமடா ….!
– வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18-1-2019
கோட்டபாய பதவி ஏற்ற -ஆட்சி எண்ணிய பொழுது ..!