இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்
கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ்
சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் 16 இத்தாலி பயணிகள் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சுகாதார துறை சிறப்பு செயலாளர் சஞ் சீவ குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் இருந்து லடாக் திரும்பிய 2 பேர் மற்றும் ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது உடல் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம் என தெரிவித்தார்.
