இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Spread the love

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    Spread the love          பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் 2008 மட்டக்களப்பு கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் 2008-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் 2008-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான தொடர் விசாரணைகளின் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற ‘பிள்ளையன்’, செப்டம்பர் 01 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2008-ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படும் ஐந்து கொலைகள்…
  • முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது
    Spread the love         முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் (2010–2012) மஹீல் செனரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தீவு முழுவதும் மீன் விற்பனை மையங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக முறையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தக் கைது…
  • 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
    Spread the love         22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அரசியலமைப்புத் திருத்த மசோதா 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் நீதித்துறை (திருத்த) மசோதா ஆகியவை இன்று (18) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை அரசாங்கம் ஆகஸ்ட் 7 அன்று வர்த்தமானியில் வெளியிட்டது. பாராளுமன்ற நடைமுறையின்படி, ஒரு…
  • முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை
    Spread the love         முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை வழங்கப்பட்டது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள்…
  • கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்
    Spread the love         கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் ஹோமகமவில் பயண உதவி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ஹோமகம, பிட்டிபான, கலகஹேன ஹோமகம, பிட்டிபான, கலகஹேன பகுதியில் செயலி மூலம் பயண உதவி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர், ஆகஸ்ட் 24 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (17) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத்…