அழுத தமிழா சிரி ….!
குண்டு வைத்து குருதி குடித்து
குலவி மகிழ்ந்தாய் …
உயிர் தின்ற களிப்பு அடங்கும் முன்னே
உனை வதைத்தான் ஏனழுதாய் ..?
வலிந்து தாக்கி
வம்பில் சிக்கி
வாழ்வு தொலைத்தேன்
வழியில் அழுதாய் …?
குந்தி வாழ்ந்த
குடிசை இடிய ….
சேர்த்து வைத்த
சொத்து கிழிய ….
ஊளை யிட்டேன்
ஊரில் அலைந்தாய் …?
பாவி உயிர் குடித்த பேயே
பாரை அழைத்தேன் வாயை கிழித்தாய் …?
தொப்பி பிரட்டும்
தொப்பை பரம்பரை ….
மூடி மறைத்த முகமும் அவிழ
மூலை உறைந்தேன் முனகி அழுதாய் ..?
குண்டு வைத்து குலவி மகிழ்ந்தாய்
குண்டி கிழிய சிறையில் படுத்தாய் …
தமிழன் அழிவில் வெடிகள் வெடித்தாய்
தமிழா இன்று சிரித்து மகிழ்வாய் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/06/2019