அரிசி விலையை – அதிகமாகி விற்றபனை புரிந்த 89 கடைகளுக்கு ஆப்பு – பாய்ந்தது சட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து அரிசிக்கான கட்டுப்பாட்டு
விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பற்றிய தேடுதல்களை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் நுகரவோர் பாதுகாப்பு அதிகார சபையினால் உள்நாட்டு சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோகிராமிற்கான
அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய் என வர்த்தமானியினூடாக அறிவித்தல் விடுக்கப்பட்டது.
நேற்று (20) மற்றும் இன்றைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 1430 அரிசி
விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்,
அவற்றுள் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் 512 வர்த்தக நிலையங்கள் இதன்போது இனங்காணப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (21) இனங்காணப்பட்ட அத்தகைய 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன்,
நேற்று இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் போதிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.