அமெரிக்கா தாக்குதல் அச்சம் – கடல் கரை பகுதியில் ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்


அமெரிக்கா தாக்குதல் அச்சம் – கடல் கரை பகுதியில் ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் காரணமாக ஈரானிய இராணுவத்தினர்

தமது ஏவுகணைகளை Strait of Hormuz கால்வாய் பகுதியில் குவித்து வருகின்றனர் .

அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் இந்த கால்வாய் பகுதியில் நுழையும்

நோக்குடன் முன்னேறி வருவதால் ஈரான் இந்த திடீர் ஏவுகணை குவிப்பை மேற் கொண்டுள்ளது

தமது இராணுவத்தின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் போர்க் கப்பல்கள்

முன்னேறியதை அடுத்தே ஈரான் இந்த ஏவுகணைகளை திடீரென குவித்துள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அதிவேக விமானங்கள்

ஈரான் எல்லையில் ஊடுருவிய நிலையில் அதனை சுட்டு வீழ்த்துவோம்

என இறுதி எச்சரிக்கையை ஈரான் விடுத்த காட்சிகள் காணொளியாக வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன

அவ்வாறான அத்து மீறல் சம்பவம் ஒன்று தற்பொழுது அமெரிக்காவினால்

மேற்கொள்ள பட்டு வருகிறது ,,மேற்படி கால்வாய் பகுதியை ஈரான் தடை செய்தால்

சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்க படும் நிலை உருவாகலாம் என்ற நிலையில்

அமெரிக்கா இந்த முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது

முரண்டு பிடிக்கும் அமெரிக்காவும் ,அதை வீழ்த்த துடிக்கும் ஈரானின்

ஏவுகணைகளும் பெரு போரை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது

அமெரிக்கா தாக்குதல் அச்சம்
அமெரிக்கா தாக்குதல் அச்சம்