அச்சுறுத்தல்கள் முறியடிக்க – சட்டத்தை கடுமையாக அமுல்படும் -இராணுவ தலைமையகம்


அச்சுறுத்தல்கள் முறியடிக்க – சட்டத்தை கடுமையாக அமுல்படும் -இராணுவ தலைமையகம்

இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம் என்றபோதிலும் சட்டத்தை கடுமையாக

அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான

அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

‘சட்ட அமலாக்க முறைமையை ஒழுங்குபடுத்தியதன் மூலம், அண்மைக்காலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை முகாமை செய்ய முடிந்தது’ என நிலையான அபிவிருத்தி இலக்குகளை

அடைவதில் பாதுகாப்பு அமைச்சினது அதிகாரிகளின் வகிபாகம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.

‘ஒருங்கிணைத்தல் அல்லது பிரதான பொதுச்சேவை விநியோக மூலோபாயத்தினூடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை

மேம்படுத்தல்’ தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்றது.

நிலையான அபிவிருத்தி இலக்குகள் என்பது, ஒவ்வொரு பெண் மற்றும் பெண் குழந்தைகள் உட்பட நாட்டின் அனைத்து

பிரஜைகளினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் வன்முறையற்ற சூழலில் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதனை உறுதி செய்யும் வகையிலும் சட்டத்தின் ஆட்சி இடம்பெறும்

நாட்டினை குறிக்கும். இவைகளே, தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கத்தின் கொள்கை

கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் செயற்பட்டியலில் உள்ளடக்கப்ட்ட வேண்டிய மிக முக்கிய அம்சங்களாகும், ‘என அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் வளங்கள் அழிவடைதல், தொற்று நோய்கள், இயற்கை பேரழிவுகள், உணவு பற்றாக்குறை போன்ற இயற்கை அச்சுறுத்தல்கள், சட்டவிரோத

குடிபெயர்வு, துப்பாக்கி பாவனை, ஆட் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் நடுத்தர மற்றும் உயர் தீவிரத்தன்மையான முறன்பாடுகள் போன்ற மனிதனால் உருவாக்கப்படும்

அச்சுறுத்தல்கள் என்பன அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

‘நாங்கள் அரச அதிகாரிகள் என்ற வகையில் நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் நமது முழுமையான ஒத்துழைப்பை தேசிய கொள்கை திட்டத்திற்கு வழங்க

கடமைப்பட்டுள்ளோம். எமது அதிகார வரம்புக்குள் காணப்படும் வழிகளை அடையாளம் காண, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் இவ்வையகம் மற்றும் அதில் வாழும் மக்களின் அமைதியான

மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கான முன்மொழிவு திட்டத்தை அளிக்கக்கூடிய நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக

நாம் ஒரு நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்’ என அவர் விளக்கமளித்தார்.

ஒரு தேசம் என்ற வகையில், இலங்கையானது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடுஇ சமூக நீதியை ஊக்குவிப்பதிலும் பொருளாதார

செழிப்பை வளர்ப்பதிலும் உலகளாவிய முயற்சிகளுக்கு அதன் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரல், 17 நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளை கொண்டுள்ளதுடன் 2016 ஜனவரி 1

முதல் அமுலுக்கு வரும் வகையில் 15 வருட கால அதனோடு இணைந்த 169 இலக்குகள் எட்டப்பட உள்ளன.

இது முழு நாட்டிலும் இ அனைத்து பங்குதாரர்களாலும் இணைந்து செயற்படக்கூடிய ஒன்றிணைந்த கூட்டுப் பொறுப்பு வாய்ந்த திட்டத்தை வழங்குகிறது.

தேசிய கொள்கை கட்டமைப்பின் 10 முக்கிய கொள்கைகள் 2030 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலில் ‘செழிப்பு மற்றும் பிரகாசமான

எதிர்காலம்’ திட்டத்தினூடாக தேசத்தின் அமைதியை உள்ளடக்கிய நாட்டை உறுதிப்படுத்துகின்றன.

அமைதிஇ நீதி மற்றும் சமமான அபிவிருத்தி உள்ளிட்ட உலகளாவிய நிகழ்ச்சி நிரல் ஊடாக இலங்கையின் அபிவிருத்தி கொள்கை

ஏற்படுத்துவது பொருத்தப்பாடாக அமையும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.