அகதி கப்பல் மூழ்கியது

அகதி கப்பல் மூழ்கியது
Spread the love

அகதி கப்பல் மூழ்கியது

அகதி கப்பல் மூழ்கியது.ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக பயணித்த அகதிகள் கப்பல் திடீரென மூழ்கியதில் 39 பேர் பலியாகியுள்ளனர் . 150 பேரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

ஆபத்தான கடல் பகுதி ஊடாக பயணித்த ஆப்ரிக்க நாட்டு சட்டவிரோத குடியற்றவாசிகள் ,பயணித்த கப்பல் திடீரென்று கடலில் மூழ்கியது .

இதன் பொழுது அந்தக் கப்பலில் பயணித்த 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் அதே கப்பலில் பயணித்த 150 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் ,71 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஏமன் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதிபயங்கரமான கடல் வழி பயணம்

ஐரோப்பாவுக்கு அதிபயங்கரமான கடல் வழிகளை தாண்டி அகதிகளாக ஆபிரிக்க நாட்டவர்கள் கப்பல் ஊடாக சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

அவ்வாறு ஏமன் கடல்வாழியை பயன்படுத்தி பயணித்துக் கொண்டிருந்த இந்த அகதிக் கப்பலே திடீரென கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீட்பு குழுக்களுக்கும் மீனவர்களும் இந்த விடயத்தில் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடல் படையினரும், மற்றும் மீட்பு குழுக்கள் அந்த கப்பலில் இருந்த 71 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் .

காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அந்த நாட்டினுடைய கடற்படை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்படி கப்பல் மூழ்கிய சம்பவம், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.