ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்
எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மராட்சி பகுதிகளில் புதன்கிழமை (18)துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த
ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன?
தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது
- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது
- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு
- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது
















