வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின்
பின்பகுதியில் ,சிறுத்தைப் புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
இதனை கண்ட வீட்டாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், நுவரெலியா வனஜீவராசிகள்
காரியாலயத்திற்கும் அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிகாரிகள் வரும் வரை, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி







