வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) குறித்த வியாபாரியின் கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணிடம் வியாபாரி தகாத வார்த்தை பேசினார்.
அதைக் கண்டித்தவரை கழுத்தில் கத்தியை வைத்து அவர் மிரட்டியதால் , பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரை கடத்திச் சென்றவர்கள் அவரை உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த வியாபாரி அங்கிருந்து தப்பி சென்று
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது







