யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

Spread the love

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில், இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

திருநகரில், நேற்றிரவு (20) குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்

, இன்று காலை விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே, அக்குடுபத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து, திருநகர் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *