மஹிந்தவை கொலைச்செய்வேன் ரவுடித்தனம் காட்டியவர் கைது
கொழும்பு– 7, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகச் சென்று ரவுடித்தனமாக நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வாரத்திற்குள் கண்டுபிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ
சிப்பாயை கைது செய்துள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹிந்தவை கொலைச்செய்வேன் ரவுடித்தனம் காட்டியவர் கைது
நபர் ஒருவர் ரவுடித்தனமாக நடந்து கொள்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
பமுனுகம கிரிவெல ஹொரபவிட்ட, பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் தனது சகோதரியின் கிருலப்பனை வீட்டில்
தங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு









