மன்னித்து விடு
கண்ணிருந்தும் குருடானேன்
காதிருந்தும் செவிடானேன்
உன்னை எண்ணவே
உள்ளமே மறந்து போனேன்
விதியின் விளையாட்டில்
விளையாடல் நடக்குது
சதிகள் துரத்த
சாதனை தவிக்குது
என்ன நினைத்தாயோ
என்னை திட்டினாயோ
காலம் வரும் ஒரு நாள்
கண்ணே கலங்காதே
உள்ளம் வலிக்கும் போதினில்
உன் நினைவு வந்து போகும்
என் மனம் வலியாலே
ஏறி தணிந்து உருகும்
பேசமுடியா நிலையிலே
பேரிடர் தடுக்குது
வேலியுடைத்து வருவோம் -அந்த
வேளையிலே சந்திப்போம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-09-2024
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லை

- ஜூலை 1 முதல் கட்டண உயர்வை தனியார் பேருந்து நடத்துநர்கள் கோருகின்றனர்







