மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது
சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வவுனியா பம்பைமடு 17 வது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.
மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது
சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.
இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளா
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது
- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா
- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்
- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை
- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி
- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி
- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்
- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்
- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
















