பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை
ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.
நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை
குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அந்நபர் குற்றவாளியாக ஆதாரபூர்வமாக மன்று உறுதிப்படுத்திய நிலையில் நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது
- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின
- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை
- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்
- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு
- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்
- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்
- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்





















