புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

Spread the love

புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ,வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நேற்று (06) திறக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டது.

தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான புங்குடுதிவில் குறித்த வைத்தியசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்த

நிலையில் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக 16 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலை இப்பகுதி மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவத்தை அதிகளவில் எதிர்பார்க்கும் முதியோரின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏனையவர்களின் நலன்களை முன்னிறுத்தியும் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

இதேநேரம் புங்குடுதீவு பகுதியானது பரந்தளவிலான பகுதியாகவும் பல கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் நிலையில் சில பகுதிகளில் இருந்து மக்கள் தமது

மருத்துவ தேவையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளும் நிலையும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் மாதாந்தம் 15 நாட்களுக்கு ஒருதடவை நடமாடும் சேவையை பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் நலன்பெறும் வகையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது தவிசாளரால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் நலன் புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்க பட்டுள்ள நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் மக்கள் இயற்கை முறை மருத்துவத்தை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்

இங்கே பாம்பு கடி மற்றும் விசா ஜந்துக்கள் தீண்டுதலுக்கும் முறையான சிகிச்சைகள் வழங்க பட்டு வருகின்றன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *