நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் நீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதனூடாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படபோவதில்லை. தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று.
எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர் கட்டணமும் குறைக்கப்படும்.
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது







