செத்து போ …..!

Spread the love

செத்து போ …..!

நீ மறந்து போனதற்கு
நீதி என்ன சொல்லு …?
நீசர்க்களாய் வந்தவரை
நீ எனக்கு சொல்லு ….?

பாதகமாய் செய்த தென்ன
பா இதழே சொல்லு …?
பாடி தானே அழைக்கிறேன்
பா மகளே மெல்லு ….

கூடு கட்டி வாழ்ந்தவளே
குற்றம் என்ன சொல்லு ..?
கூண்டு விட்டு போனவளே
குற்றுயிரை கொல்லு …..

நீ பார்த்த விழிக்குள்ளே
நினைவுகளை தொலைத்தாயா …?
நித்தம் நானும் துடித்திட தான்
நினைவுகளை நட்டாயா …?

மறந்து விட்டு போனவளே
மார்கழியாய் அலைகிறேன் ..
இதயம் இல்லா போனவளே
இன்னும் ஏனோ வாழ்கிறாய் …?

வன்னி மைந்தன் (ஜெகன் )

ஆக்கம் 10-06-2020

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *