கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

Spread the love

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். திரு. எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ்.மந்திரிநாயக்கவிடம் திங்கட்கிழமை (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.