கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள் கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பாக அத தெரண வினவியபோது, கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்தது.







