இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு
இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ,பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு நேற்றைய தினம் (16) ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார்.
சந்தேகநபர் மாதாந்தம் 100,000 ரூபாயை இலஞ்சமாக வழங்க விரும்புவதாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு குறித்த பொலிஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, சந்தேகநபர் 50,000 ரூபாயை வழங்க முற்படும் போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு








