Tag: வெளிநாடுகளில் இருந்து
வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்
வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருந்த மேலும் 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
துபாயில் இருந்து நேற்று மாலை 400 பேர் வந்துள்ளனர். இவர்களுள் 7 சிறுவர்கள்
இடம்பெற்றுள்ளனர். மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜப்பான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று
இலங்கை வரமுடியாமல் அந்த நாடுகளில் சிக்கியிருந்த 425 இலங்கையர்கள்
இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
ஜப்பானில் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்த 280 இலங்கையர்கள்
டோக்கியோ நகரில் இருந்து மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தமிழ் நாடு சென்னையில் இருந்தும் 27 பேர் இலங்கை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமை படுத்த பட்ட 300 பேர் விடுதலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமை படுத்த பட்ட 300 பேர் விடுதலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் கைது செய்ய பட்டு
பதின் நான்கு நாட்கள் தனிமை படுத்த பட்டனர் ,அவ்வாறு
தனிமை படுத்த பட்ட முன்னூறு பேர் அடங்கிய குழு ஒன்று தற்போது
விடுதலை செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு விடுதலை செய்ய பட்ட அனைவருக்கும் பரவி வரும்
கொரனோ நோய் தொற்று இல்லை என தெரிவித்து இந்த
விடுதலை இடம்பெற்றுள்ளது
இவ்வாறு சென்றவர்களில் இத்தாலியில் இருந்து பயணித்தவர்களே
அதிகம் என தெரிவிக்க படுகிறது







