Tag: விபத்துக்கள்
அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்
அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்
அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள் ,ஹட்டன் – டயகம வீதியில், டிக்கோயா போடைஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை (29) மாலை 3 மணியளவில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக நோயாளர் காவு
வண்டிகள் மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், அக்கரப்பத்தனை வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ். சிவபாலன் என்பவர் அன்றைய தினமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 66 வயதுடைய பி. லூக்ஸ் என்பவர்,
சிகிச்சை பெற்று வந்த நிலை
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (01) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

அதிகரித்து வரும் விபத்துக்கள்
அதிகரித்து வரும் விபத்துக்கள்
அதிகரித்து வரும் விபத்துக்கள் ,விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
திடீர் விபத்து
திடீர் விபத்துகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்து பார்ப்பதன் ஊடாக இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றுப் பேசிய போதே பேராசிரியர் ருவந்தி பெரேரா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தெற்காசிய நாடாக இலங்கையில் மிக உயர்ந்த மட்டத்தில்
தெற்காசிய நாடாக இலங்கையில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
நாங்கள் 16 வயது வரை சிறுவர்களாக பார்க்கிறோம். இதை பெரும்பாலும் இரு வெவ்வேறு வயதுக் குழுக்களாக பிரிக்கலாம். 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகள்.
அடுத்ததாக, 12-14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள். விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன.
விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஆகியவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விபத்துகளில் அடங்கும்.
விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேராசிரியர் ருவந்தி பெரேரா சுட்டிக்காட்டினார்.










