Posted in இலங்கை செய்திகள்

வவுனியா போக்குவரத்து பொலிசாரிடம் மாட்டிய 48 சாரதிகள்: photo in

வவுனியா போக்குவரத்து பொலிசாரிடம் மாட்டிய 48 சாரதிகள்: photo in

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07.02) மாலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை இரு‌ மணித்தியாலயமாக வவுனியா, மன்னார் வீதி,

பட்டாணிச்சூர்‌ பகுதியில் இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ்குழுவினராலே இவ் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இவ் விஷேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய 44 சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேருக்கு எதிராக நீதிமன்ற

வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றிவாகனம் செலுத்தியமை, குடிபோதையில் வாகனம் செலுத்தியமை,

வாகனமோட்டும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக

தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா போக்குவரத்து பொலிசாரிடம்
வவுனியா போக்குவரத்து பொலிசாரிடம்