Posted in இலங்கை செய்திகள்

வட கிழக்கு -மலையக கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டிய நேரம் இது -இராதா

வட கிழக்கு -மலையக கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டிய நேரம் இது -இராதா

வடக்கு கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றினைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக் காலகட்டத்தில் வடக்கில் பிரிந்து செயற்படுவது வருத்ததிற்குரியது

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்

வடக்கு கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றினைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக் காலகட்டத்தில் வடக்கில் பிரிந்து செயற்படுவது வருத்ததிற்குரியது என்று

கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பிரச்சனைக்கும் சர்ச்சைக்கும் பல உயிர்கள் காவு கொள்ளபட்ட தற்போதும் இந்த பிரச்சனைகளை

அனுபவித்து வரும் புஸ்ஸல்லாவயில் இருந்கு பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 22 கிலோமீற்றர் பிரதான பாதையில் ஒரு பகுதி இரண்டு கிலோமீற்றர் தூர பாதை

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் மூன்று கோடி 33 இலட்சம் ரூபா செலவில் காபட் பாதையாக

செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

இன்று நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனத்துவம் தலை விரித்து ஆடுகின்றது. ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் அதனை நமக்கு கோடிட்டு காட்டியுள்ளது. இவ்வாறான

நிலையில் தமிழ் மக்கள உட்பட சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஒன்றுனைந்து செயற்பட வேண்டும். இந்நிலையல் வடக்கின் முன்னால் முதல் அமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

அவர்கள் புதிய கட்சியாக தமிழ் தேசிய அமைப்பாக உறுவாக்கி இருக்கின்றார். இது வடக்கில் தமிழ் மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது வட

கிழக்கில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை உள்ள நிலையில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

அதற்கான கால அவகாசமும் உண்டு. தமிழர்களின் ஒற்றுமை ஒங்கி நிற்க வேண்டும் என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.

வட கிழக்கு -மலையக கட்சிகள்