Tag: லொஹான்
லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல்
லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல்
லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவியை டிசம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ
வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் 30 ஆம் திகதி லொஹான் ரத்வத்த, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவும் நவம்பர் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த கார் தொடர்பில் அவர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தாக மிரிஹான
பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் ஷஷி ரத்வத்தவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களான
இருவரையும் டிசம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ
வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.
இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த
3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













