Posted in இலங்கை செய்திகள்

ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில்

ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06) ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் தீ காயத்திற்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

சிறுமி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்

மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மற்றுமொரு வழக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து

வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

    Posted in Uncategorized

    ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்

    ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்

    முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இவ்ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதன் போது ” சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பது, அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீனுக்கு தெரியாதா?” என ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

    அத்துடன் ”மலையகத்திலிருந்து சிறுவர்கள் அதிகளவில் செல்வந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு

    அமர்த்துவதற்கு எதிராகக் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் ”இந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், சிறுமிக்கு நீதி கிடைக்க

    தாமதமாகும் பட்சத்தில், இன்று அமைதி வழியாக நடத்தப்பட்ட போராட்டம், நாளை பாரியளவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தா

      Posted in இலங்கை செய்திகள்

      ரிஷாட், ஹக்கீமை நீக்க ஐ.ம.ச மந்திராலோசனை

      ரிஷாட், ஹக்கீமை நீக்க ஐ.ம.ச மந்திராலோசனை

      முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம்

      ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இடைநிறுத்த சஜித் பிரேமதாஸ அறிவுறுத்தியுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

      ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்

      பிரேமதாஸ தலைமையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

      ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள்,

      அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்

      Posted in இலங்கை செய்திகள்

      ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்

      ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்

      முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை

      வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

      உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

      ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          தயாராகும் சிறை -அமைச்சர் ரிஷாட் உள்ளே போகிறார்

          தயாராகும் சிறை -அமைச்சர் ரிஷாட் உள்ளே போகிறார்

          வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு

          மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட்

          பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை

          மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

          சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும்

          நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு

          மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.