விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை ,விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விளையாட்டை மக்கள் மயமாக்குவதற்காக

விளையாட்டை மக்கள்மயமாக்குவதற்காக, விளையாட்டுத் துறையில் மனித வளத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் முதன்மைக் கருமமாகும்.

போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத இளம் தலைமுறையினர், வயது வந்தோர், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்காக விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்

நோக்கத்துடன், பாடசாலைக் கட்டமைப்புகள், பொது விளையாட்டு அரங்குகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்காக மூன்று திட்டங்களை அமுல்படுத்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல்

அதன்படி, விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல், கிராமிய பாடசாலைகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், மற்றும் இனங்காணப்பட்ட

விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய திட்டங்களை 2025-2027 காலப்பகுதியில் விளையாட்டு

அபிவிருத்தி திணைக்களம் மூலம் அமுல்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை

பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை

இலங்கை சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) காலை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இடம்றெ்ற வாக்கெடுப்பின் போது குறித்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.

ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டக் கல்லூரி பரீட்சைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பேரில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி 2020 டிசம்பரில் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி கவுன்சிலால் வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்க்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும் இந்த நடவடிக்கையை விமர்சித்ததோடு, இது பெரும்பான்மையான மாணவர்களுக்கு நியாயமற்றது என்றும் கருதியமை குறிப்பிடத்தக்கது.

No posts found.