Tag: யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மார்க் ஆண்ட்ரே யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மார்க் ஆண்ட்ரே யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு திங்கட்கிழமை (04 ) விஜயம் செய்ததுடன் செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.
அரசாங்க அதிபருடனான சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்றையதினம் (05) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.-
மார்க் ஆண்ட்ரே யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்தார்.
யாழ்ப்பாண கோட்டைக்கு விஜயம்
யாழ்ப்பாணப் கோட்டைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ்ப்பாண நகரத்தின் அழகை பார்வையிட்டார்.
- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுby நிருபர் காவலன்
- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துby நிருபர் காவலன்
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கைby நிருபர் காவலன்
- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசுby நிருபர் காவலன்
- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்by நிருபர் காவலன்












