முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை
Posted in இலங்கை செய்திகள்

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை

முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள தவராசா கலையரசன் இவ்விடயம் தொடர்பில் இன்று (23) செய்தியாளர் ஒருவரிடம் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மன்னாரில் இடம்பெற்ற எமது கட்சி கூட்டத்தில் நான் முஸ்லீம்கள் குறித்து பேசியுள்ளதாக வர்ணித்து சில செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. சில தரப்பினர் இவ்விடயத்தை முன்னெடுப்பதை நான் அறிகின்றேன்.

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை

இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் அவ்வாறு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனை மறுக்கின்றேன். கட்சியில் உள்ள உள்ளக விடயங்களை நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.

அதன் அடிப்படையில் சில குற்றச்சாட்டுக்களை அங்கு தெரிவித்து கலந்துரையாடினோம். அத்துடன் இக்கூட்டத்திற்கு எவ்வித செய்தியாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

மிகவும் பொய்யான விடயங்களை திட்டமிட்டு பிரசுரித்துள்ளனர்.கல்முனை விடயத்தையும் இக்கூட்டத்தில் பேசினேன்.இதர தமிழ் முஸ்லீம் கட்சி தொடர்பிலும் இக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பில்

எமது கட்சி தலைமையிடமும் பேசவுள்ளேன்.வீணாக இவ்வாறு அவதூறு பரப்புவது ஏற்க முடியாதது.

இவ்வாறு செய்தி வதந்திகளை பரப்புவது இரு தரப்பினரை குழப்புவதுடன் பிரச்சினைகளையும் ஏற்படுத்த திட்டமிடப்படுகின்றது என குறிப்பிட்டார்.

No posts found.
Posted in உலக செய்திகள்

கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்

கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்

மலேசியா : திருநெல்வேலி மாவட்டம் புளியரையை சேர்ந்த இம்மானுவேல் மகன் ஜான்சன் என்பவர் மலேசியாவில் தொழிலாளியாக பணி புரிந்து வந்துள்ளார்.

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கிய நிலையில் தாயகம் திரும்ப முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 26 ஏப்ரல் அன்று மலேசியாவில் மரணம் அடைந்துள்ளார். இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய்,

மனைவி உள்ளிட்ட உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியை தொடர்பு கொண்டு அவரை மலேசியாவில் அடக்கம் செய்ய உதவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதனடிப்படையில் தமிழகத்தை சார்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மலேசியாவில் செயல்படும் ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் தலைவர் சபருதீன் மற்றும் அன்சர் அலி ஆகியோரை தொடர்பு

கொண்டு தகவல் தெரிவித்தனர். ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் முயற்சியால் ஜான்சன் உடல் கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.

இச்செய்தி அறிந்த ஜான்சன் குடும்பத்தினர் எஸ்.டிபி.ஐ கட்சியினருக்கும், ஐ.எம்.ஐ.எம் அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்..