Tag: முகத்தில் துப்பிய
Posted in இலங்கை செய்திகள்
சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
Author: நலன் விரும்பி Published Date: 03/12/2020 Leave a Comment on சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
அட்டுளுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர், பொது சுகாதார
பரிசோதகர் அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன்,
குறித்த பரிசோதகரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரகம-அட்டுளுகம பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், குறித்த பிரதேசத்தில் அடையாளம்
காணப்பட்ட தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, அந்த தொற்றாளர் குறித்த அதிகாரியின் முகத்தில் உமிழ்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






