Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களுடன் இணைந்து புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நடைபெற்ற 2020 மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டி

மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களுடன் இணைந்து புஸ்ஸல்லாவ சரஸ்வதி

மத்திய கல்லூரியில் நடைபெற்ற 2020 மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டி

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் 2020 வருடாந்த மெய்வள்ளுனர் இல்ல

விளையாட்டு போட்டிகள் மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களுடன் இணைந்து நடாத்தபட்டது. 10.02.2020

பாடசாலையின் அதிபர் ஆர்.எஸ்.ரவிசந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு அதிதிகளாக மத்திய மாகாண கல்வி உதவி கல்வி

பனிப்பாளர்கான திருமதி வி.அமுதவள்ளி எஸ்.தாமோதரம் கம்பளை கல்வி வலயத்தின் மேலதிக கல்வி பனிப்பாளர்களான சி.வி.கணேசன்¸ எஸ். கிருஸ்ணபிள்ளை

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.பலிபான¸ விசேட அதிதிகளாக மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களான ஒட்ட வீரர்களான

எம்.அஜந்தன்¸ கே. சந்திரதாஸ்¸ எம். மனோகரன்¸ தடை தாண்டல் வீரர் எம்.சத்தியசீலன்¸ உலக தடகள போட்டி வீரர

து.விஜிந்த் உட்பட அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்

போட்டிகளில் ஓட்டம்¸ அஞ்சல் ஒட்டம்¸ உடற்பயிற்சி¸ பழைய மாணவ மாணவிகளுக்கான போட்டிகள்¸

பெற்றோர்களுக்கான போட்டிகள் மரியாதை அணிவகுப்பு பரிசில்கள் வழங்கள் அதிகள் உரைகள் ஆகியன நடைபெற்றன

இராஜலிங்கம் இல்லம் நடேசன் இல்லம் சேதுகாவலர் இல்லம் என மூன்று இல்லங்களுக்கு இடையோ நடைபெற்ற இந்த மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டிகளில்

சேதுகாவலர் இல்லம் 705 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. நடேசன் இல்லம் 685 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் இராஜலிங்கம் இல்லம் 665

புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றது. இல்லங்களின் பெயரை பொருத்தவரையில் இராஜலிங்கம்

இந்த பாடசாலையின் முதல் அதிபர் சேதுகாவலர் முதல் ஆசிரியர் நடேசன் முதல் மாணவன் என்பதும் குறிப்பிடதக்கது.

மலையகத்தின் சர்வதேச விளையாட்டு