மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை

இராவணா எல்ல மேல் பகுதியில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் வாகனங்களை செலுத்திய வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் தற்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

video

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயர் தர மாணவன் பலி

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயர் தர மாணவன் பலி

மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (22) இரவு, வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்தார்.

சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் பலி

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் பலி

தங்கொவிட்ட ஹெந்தல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருதுவத்த, தங்கொவிட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மண்மேட்டை வெட்டிக் கொண்டிருந்த போது சுமார் 15 அடி உயரத்தில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்து அதற்கு அடியில் புதையுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தங்கொவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.