Tag: மண் சரிவு
மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண் சரிவு
மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர்
உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் சரிவு
இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில்
தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மண் சரிவு 02 பேர் உயிரிழப்பு
மண் சரிவு 02 பேர் உயிரிழப்பு
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 03 பேர் காணாமற் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது
இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரண
பிரதேசத்திலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்று மூழ்கி உயிரிழந்துள்ளனர். புத்தளம் மகாவௌ குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார். கம்பகா நகரம் உள்ளிட்ட
சுற்றுப்புறங்களில் பல வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.
சில இடங்கள் 5 அடி உயரத்தில் நீரில் மூழ்கி உள்ளன. நீர் வழிந்தோடும் பகுதி அடைபட்டுள்ள மையே இதற்கான பிரதான காரணமாகும். அத்தனகல்ல ஓயாவும் ஊறுகல் ஓயாவினாலும் வெள்ள அனர்த்தநிலை ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கட்டடம் ஒன்று ஒன்றின் மீது மண் திட்டு இடிந்து
விழுந்து இருப்பதால் பல வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வழிந்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது
ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பீதியில் மக்கள்
ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பீதியில் மக்கள்
இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
நுவரெலியா ,இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் உள்ளது எனவும்
,இவ்வேளை இங்குள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை
நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டஙகளில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை , நுவரரெலியா மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு
மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணிவரை ஏற்புடையது என கட்டிட ஆய்வு
நிறுவனம் தெரிவித்துள்ளது.






