Tag: மக்களின்
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு ,பரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன்
தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும்
வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு
பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால்
பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிசார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை
செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150000க்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு
கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட
அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது
தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென
பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
“உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில்
முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு
முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து
விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள்.
இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய
கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு
திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார். இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அவகரிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள்.
அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள்.
ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு
கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது.
அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி
இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும்கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது.
சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட
அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது.
அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள்
காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால்.
இந்த யானை வேலைக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள்.
எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள்.
சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை
இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது.
இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர்.
இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார்.
இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது.
அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால்
இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என்றார்.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

மலையக மக்களின் இருப்புக்காக காங்கிரஸ்
மலையக மக்களின் இருப்புக்காக காங்கிரஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருப்பதால்தான் மலையகத்தில் காணிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் இல்லாவிட்டால் காணிகள் என்றோ பறிபோய் இருக்கும். எனவே, மலையக மக்களின் இருப்புக்காக,
பாதுகாப்புக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை நிச்சயம் வெற்றி பெறவைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
மஸ்கெலியா பகுதியில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் ரமேஷ் மேலும் கூறியவை வருமாறு ,
‘ நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை, வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டு வழிநடத்தியவர்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அதனால்தான் ஜனாதிபதி தேர்தலின் போது அவரை ஆதரிக்குமாறு அறிவித்திருந்தோம்.
அதுமட்டுமல்ல அவர் தலைமையிலான ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கு பல சேவைகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. காணி உரிமையை வழங்குவதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டது. சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாட்டையும் பாதுகாத்து, மலையகத்துக்குரிய அபிவிருத்திகளுக்கான உதவிகளையும் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.
எமது மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஏனையோர் வாக்களிக்கவில்லை. அதனால் பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது.
தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எமது மக்கள் ஏன் இதொகா வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்? இதொகாதான் மக்களுக்காக குரல் கொடுக்கும், மக்களுக்காக சேவைகளை செய்துள்ளது. உரிமையுடன்
வாக்கு கேட்பதற்குரிய தகுதி எமக்குதான் உள்ளது. காங்கிரஸ் இல்லாவிட்டால் மலையகத்தில் காணிகளெல்லாம் பறிபோய் இருக்கும்.
நாம் தேர்தல் காலத்தில் மட்டும் மக்கள் மத்திக்கு வரவில்லை. என்றும் மக்களுடன்தான் இருக்கின்றோம்.
ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் தோட்டங்களுக்கு வருபவர்கள்தான் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என விமர்சித்துக்கொண்டுள்ளனர்.
தபால்மூல வாக்களிப்பில் எமது அரச ஊழியர்களில் 75 வீதமானோர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளனர்.
ஏனெனில் எமது மக்களுக்கு அரச சேவையில் வேலைகளை பெற்றுக்கொடுத்ததும் காங்கிரஸ்தான். எனவே, உதிரிகளுக்கு வாக்களித்து, வாக்குகளை சிதறடிக்காமல், சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் 99 வீத வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார் எனவும் பெருந்தோட்ட சமூகத்தில் வேறு எந்த தீர்மானமும் இல்லை எனவும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி ஜெ. ஆர். ஜயவர்தன மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், அதற்காக 10
மாவட்டங்களில் பரந்து வாழும் பெருந்தோட்ட மக்கள் ஒரே குழுவாக நன்றி தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்டிற்கு இனவாதமற்ற தலைவர் ஒருவரே தேவை எனத் தெரிவித்த அவர், உலகமே அங்கீகரித்த முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரே தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனவாதியல்ல என்றும் வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்,
‘’இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களை விட, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் பேரணிகளுக்கு ஒரு சிறப்பு இருக்கின்றது. ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவின் பொதுக்கூட்டங்களுக்கு மாத்திரமே இந்நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று கூடுவதே இதற்குக் காரணமாகும்.
இந்த நாட்டைப் பெரும் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீட்டெடுத்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த நாட்டில் 40% மக்கள் இந்த தேர்தலில் மௌனமாகவே இருக்கின்றனர்.
மலையகம், வடக்கு கிழக்கு அல்லது தெற்கு என அனைத்து மாகாணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினரே மௌனமாக உள்ளனர். அவர்கள் மௌனமாக இருந்தாலும் செப்டம்பர் 21 ஆம் திகதி தங்கள் கடமையையும் பொறுப்பையும் சரியாக நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
பெருந்தோட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் அவர்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள். அவர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தியதில்லை. மேலும் அவர்கள் இனவாதிகளும் அல்ல. இதன்படி ஜனாதிபதி தேர்தலில் 99%
பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார். அது தொடர்பாக பெருந்தோட்டத்தில் வேறு முடிவு இல்லை. மேலும் இனவாதமற்ற தலைவர் ஒருவரே எமக்குத் தேவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இனவாதம் இல்லை.
உலகின் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியால் என்ன நடக்கிறது என்பதை நாம் கடந்த காலத்தில் அனுபவித்திருக்கிறோம்.
வரிசையில் நின்றாலும் மருந்து கிடைக்காத காலமும் இருந்தது. தோட்டத்தில் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல முச்சக்கர வண்டி இன்றி கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்தனர்.
அவை நாம் அனுபவித்த விடயங்கள். அவ்வாறு நடக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. நாம் ஏன் மீண்டும் அந்த நிலைக்குச் செலல வேண்டும்?அரசியல் கட்சிகள், நிறம் முக்கியமில்லை.
பொருளாதார ரீதியில் நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வடக்கு, தெற்கு, மலையகம் என்று நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். அனுபவம் இல்லாத, உலகம் ஏற்காத தலைவரை தெரிவு செய்வதா? அல்லது முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை
கொண்டவர் என உலகமே அங்கீகரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்வதா என்ற கேள்விக்கான பதில் உங்களிடமே உள்ளது.
ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்தே சர்வதேச சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்பிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அத்தகைய ஒரு
தலைவர் ஒருவர் உள்ளாரா என்பதை பார்க்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச ஆதரவு இல்லாமல் நம் நாடு மீள முடியாது.
குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்தோம் என்ற காரணத்துக்காக மாத்திரமன்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை முன்னேற்றும் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் அமுல்படுத்த வேண்டுமானால் இந்த
ஜனாதிபதித் தேர்தலில் அவர் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். கேஸ் சிலிண்டரை வெற்றிபெற உங்கள் வாக்கு அவசியம். இல்லை என்றால், மறுநாளில் இருந்து கேஸ் சிலிண்டர்களைத் தேடி வீதிக்கு செல்ல வேண்டி இருக்கும்.
தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியின் தலைவர் சுகத் ஹேவா பத்திரன,
‘’இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு தலைவர் இல்லை. அதை இந்நாட்டு மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.
எந்த குப்பைகளை ஏற்றுக்கொண்டேனும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு இன்று சஜித் பிரேமதாச தள்ளப்பட்டுள்ளார்.
மறுபுறம் மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பி இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பாசிச அரசியல் இயக்கம் முயற்சிக்கிறது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலமே சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன் வர்த்தக சமூகத்தின் நோக்கங்களை அடைய முடியும் என்பதைக் கூற வேண்டும்.
கடந்த வாரம் முழுவதும், நமது பங்குச் சந்தை வேகமாக சரிந்தது. ஆனால் இன்று பங்குச்சந்தை மீண்டு வருகிறது.
ஏனெனில், அரச ஊழியர்களின் தபால்மூல வாக்குகளில் பெரும்பான்மையான கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் என்பதை அனைத்து அறிக்கைகளும்
கணக்கெடுப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்பதாலேயே இந்த முன்னேற்றம் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் மீண்டும் நம்பிக்கை உருவாகியுள்ளது.
இந்த நாடு இரத்தக் குளமாகி, பயங்கரமானதாக மாறிவிடுமோ என்ற சந்தேகத்தினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை இரத்துச் செய்யத்
தூண்டப்பட்டுள்ளனர் என்பதை சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர் என்ற வகையில் நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
நம் நாட்டின் இரண்டு முக்கிய வருமான ஆதாரங்கள் சுற்றுலாத்துறை மற்றும் அந்நியச் செலாவணி ஆகும். இன்று அதற்கும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் ஜே.வி.பிக்கு வாக்களிக்க வருவார்கள் என்ற பொய்யான அலை
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலி அலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.
இந்த போலி அலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர்.’’ என்று தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது
மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது
கலபட தோட்டத்திற்கும் மவ்ஜூன் தோட்டத்திற்கும் காணிகள் இந்த அரசாங்கத்தின் மறுசீரமைப்பின் கீழ் வேறு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மறுசீரமைப்பிற்கு அந்த தோட்டத்தில் வாழும் மக்களின் குடியிருப்புகள் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் EPF,ETF நிலுவைகளும் அவ்வாறே இருக்கிறது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் தோட்டத்தின் பெரும் பகுதி வெளியாட்களுக்கு வழங்குவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம், வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி












