Tag: பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்
Posted in Uncategorized
பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்
Author: நலன் விரும்பி Published Date: 08/05/2021 Leave a Comment on பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்
பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்
அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்கு உள்ளாக்கிய கெப்
ரக வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் அரச அதிகாரி ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் மோட்டார் சைக்களில் மற்றுமொரு அதிகாரி உடன் பயணித்துக் கொண்டிருந்த போது
அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி நேற்றைய தினம் (07) குறித்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.






