Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பொறுத்திரு வருகிறேன் …!

பொறுத்திரு வருகிறேன் …!

திக்கு வாயில் மொழி சிக்க
திண்ணையிலே இருக்கேண்டி
கத்துக்கிட்டு வாறேன்டி
காத்திருக்க மாட்டாயா ..?

பத்திரமா நெஞ்சுக்குள்ளே
பாசமா இருக்கிறியே
செத்திடவா போறேன்
செவந்து விழி எதுக்கடி …?

கத்திடமா இருக்குமா
கடல் அலை இல்லையடி
பத்து மாதம் சுமப்பவளே
பாதகமாய் வேணாண்டி

சத்துணவு நான் தாரேன்
சாந்தமாய் இருந்திடடி
பந்தியிலே அழைக்கிறேன்
பரவசம் கூடிடடி

சாரல் வந்து அடிக்குதடி
சாளரத்தை பூட்டிடடி
செந்தணலை ஏற்றிடவே
செந்தாமரையே காத்திடடி

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 19-06-2020