Tag: பேத்தியின் இந்த நிலைக்கு
பேத்தியின் இந்த நிலைக்கு காரணம் தாதியர்
பேத்தியின் இந்த நிலைக்கு காரணம் தாதியர்
8 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம் மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா
வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம். அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,
பேத்தியின் இந்த நிலைக்கு காரணம் தாதியர்
பின்னர் மருந்துகளை ஏற்றுக் கொண்ட போது கை வீங்கி இருந்தது இது தொடர்பில் அங்கிருந்த தாதிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும் போது மருந்து மற்றும் ரத்தம் வெளியில் வருகிறது என்று சொன்னபோதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
அதற்கு அடுத்த நாள் வைத்தியரிடம் சொன்ன போது தான் வைத்தியர் பார்வையிட்டு கை முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதற்குரிய மருந்துகளை கொண்டு அந்த கையை பழைய படி கொண்டு வருவோம் என்று தெரிவித்தனர். இருந்தாலும் கடந்த இரண்டு நாளைக்கு முதல் கை அகற்றப்பட்டுள்ளது.
தற்போதும் அவசர சிகிச்சை பிரிவிலேயே எனது பேத்தி உள்ளார். இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை,
இதற்கு முழுமையான காரணம் அந்த விடுதியில் இருந்த தாதியரின் கவனயீனமே, என சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார்.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
by நிருபர் காவலன் - துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது
by நிருபர் காவலன் - இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது
by நிருபர் காவலன் - ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்
by நிருபர் காவலன்







