Tag: புற்றுநோய்
இலங்கையில் 30-50 வயதுக்குட்பட்டவர்களிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்
இலங்கையில் 30-50 வயதுக்குட்பட்டவர்களிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்
இலங்கையில் 30-50 வயதுக்குட்பட்டவர்களிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: சுகாதார அதிகாரிகள்
சுகாதார அதிகாரிகள்
இலங்கையில் 30 முதல் 50 வயதுடையவர்களிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது குறித்து சுகாதார அதிகாரிகள்
கவலை தெரிவித்துள்ளனர், இது இதேபோன்ற உலகளாவிய போக்கை பிரதிபலிக்கிறது.
முன்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இந்த புற்றுநோய்கள் அதிகமாக காணப்பட்டதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், சமீபத்திய
தரவுகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன, தற்போது இளைய பெரியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர்
டாக்டர் ஹசராலி பெர்னாண்டோ
டாக்டர் ஹசராலி பெர்னாண்டோ, வளர்ந்து வரும் முறை ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார கவலை என்று கூறினார்.
அதிகரித்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்க ஆரம்பகால பரிசோதனை, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் அதிக பொது விழிப்புணர்வின்
முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு தனிநபர்களை வலியுறுத்தினார்.
இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்
இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்
இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது ஆண்டுதோறும் இலங்கையில் 1000-க்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக புற்றுநோய் அதிகார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுகாதாரத் துறையின் கூற்று படி இந்த நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
இவர்களில் 30 விதமானவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகவும் 25 வீதமானருக்கு மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 புற்று நோயாளிகள் பதிவாகவும் அவர்கள் 4000 பேர் இனத்த புற்று நோய்களில் நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டு தோறும் 40000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் பெரும அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புற்றுநோய் காண காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே மக்களை பேராபத்திலிருந்து தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்
மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்
மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம்
செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்
இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.
மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல்
புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைபிடிப்பதே முக்கிய காரணமாக
உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படுவது முக்கிய அறிகுறி என்கிறார்கள், மருத்துவர்கள்.










