Tag: தோட்டாக்கள் மீட்பு
ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு
ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு
ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு ,கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17
புறக்கோட்டை பொலிஸார்
தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டியில் தோட்டா
யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத பாகங்கள் என்பனவற்றை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு சோதனை செய்து கண்டெடுத்துள்ளது.
சீதுவ லியனகெமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 8 ஏக்கர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.
விமான எதிர்ப்பு வெடிமருந்துகள் இரண்டு, ஒரு கைக்குண்டு, ஒரு எல்எம்ஜி தோட்டாக்கள், இரண்டு வகையான வெடிபொருட்கள், ஒரு சிறிய துப்பாக்கியின் 17 பாகங்கள், ஒரு டெட்டனேட்டர், இரண்டு வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் பத்து தோட்டாக்கள் அடங்கிய சரம் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
அனுலியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தின் நிறைவின் போது மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் இவற்றை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இவற்றை எடுத்துச் சென்று இந்தத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றை மறைத்து வைத்தவர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களைக் கைது செய்ய களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்














