துவாரகா பிரபாகரனின் காணொளி குறித்து எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

துவாரகா பிரபாகரனின் காணொளி குறித்து எச்சரிக்கை

துவாரகா பிரபாகரனின் காணொளி குறித்து எச்சரிக்கை

மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக செயற்கை

நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, நவம்பர் 27ஆம் திகதி உலகம் முழுவதும் வீடியோ காட்சி வெளியிடப்படத் தயாராகி வருவதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவீரர் தினம் என விடுதலைப் புலிகள் அறிவித்த தினமான நவம்பர் 27 அன்று பிரபாகரன் சிறப்புரையாற்றுவது வழக்கம்.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக நோர்வேயில் உள்ள மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வீடியோ