Posted in Uncategorized

இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்ட உரக் கப்பலை மீளவும் சீனாவுக்கே இலங்கை திருப்பி அனுப்பியது
மேற்படி கப்பலில் எடுத்துவரப்பட்ட உரத்தில் விஷ கிருமிகள் உள்ளதாக இலங்கை தாவரவியல் அமைப்பு தெரிவித்தது

மேற்படி அமைப்பு தமக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சீன உர நிறுவனம் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் மூன்று நாளுக்குள் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது

இவ்விடயம் இலங்கை சீனாவுக்குள் மீண்டும் முறுகளை ஏற்படுத்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) நேற்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த

விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும் இந்த கலந்துரையாடலின்போது, சீன தனது புதிய வின்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளமைக்காக ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

சீன பொருட்கள் புறக்கணிப்பால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் – சீன

சீன பொருட்கள் புறக்கணிப்பால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் – சீன

சீன பொருட்கள் புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சீன பொருட்கள் புறக்கணிப்பால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் – சீன அரசு பத்திரிகை எச்சரிக்கை
இந்தியா, சீனா

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க

வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மேலும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த

பத்திரிகையில் ‘சீன தயாரிப்புகள், செல்போன் செயலிகளை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது.

அதில், இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் அந்த நாட்டு பொருட்கள் வர்த்தகத்தில் எதிர்மறை விளைவுகள்

ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் சீன சந்தை விரிவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் இரு நாட்டு உறவுகள் மேலும் பாதிக்கும் என எச்சரித்துள்ள அந்த பத்திரிகை, எனினும் சீன பொருட்களின்

விலை உள்ளிட்ட வாடிக்கையாளர் நலன் சார்ந்த அம்சங்களால் இந்த கோஷங்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.